பிறந்த நட்சத்திர கர்மா பரிகார ஜோதிடம்: ஜாதக சேவை மற்றும் வாஸ்து ஆலோசனை

பிறந்த நட்சத்திர அடிப்படையில் ஜாதகம் ஆய்வு செய்து ஒவ்வொரு கிரகங்கள் நின்ற நட்சத்திரம் மற்றும் பாகை மூலம் துல்லிய பலன்கள்  அறிந்து தங்கள் முன்னேற்றத்திற்க்கு தடையாக உள்ள கர்மாவை பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்தல்.

ஜாதகம் - வாஸ்து - jaathagam - vaastu

உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் — உங்கள் கடந்த கால கர்மா (செயல்கள்) மற்றும் குடும்ப பரம்பரை சக்திகளின் தாக்கங்களால் உருவாகின்றன என்பதை  அறிவோம்.

நாங்கள், பரிசுத்தமான ஜோதிடக் கலையின் மூலம் ஜாதக ஆய்வு செய்து, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியங்களிலும் கர்மாவின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, தெளிவாக விளக்கி தருகிறோம்.

🔹 ஜாதக தோஷ அமைப்புகள்:
நீங்கள் எந்தவிதமான கர்ம தோஷங்களில் சிக்கியுள்ளீர்கள் என்பதை ஜாதக ரீதியாக துல்லியமாக கூறி, அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்து வாழ்க்கையில் முன்னேறுவது என்பதற்கான சரியான பரிகார வழிகளை ஆலோசனை அளிக்கிறோம்.

🔹 முன்னோர்களின் கர்மா:
உங்கள் தாய்-தந்தை மற்றும் முன்னோர்கள் செய்த புண்ணியங்களும் பாபங்களும் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் நுண்ணிய தாக்கங்களை ஆராய்ந்து, அவர்களின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் விளக்குகிறோம்.

🔹 குலதெய்வ அருள்:
உங்கள் குல தெய்வத்தின் அருள் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு நிலைத்திருக்கிறது என்பதை உணர்த்தி, அந்த அருள் சக்தியை மேலும் வலுப்படுத்த தேவையான வழிமுறைகளை எடுத்துச் சொல்கிறோம்.

🔹 கர்ம வினை நீக்கம்:
இறைவனால் முன்பே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை பாதையை அறிந்துகொள்ளவும், மேலும் புதிய கர்ம வினைகளை சேர்த்துக் கொள்ளாமலும்  எப்படி பாதுகாப்பது என்பது பற்றி, சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் காட்டிய வழிகளை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் தெளிவாக எடுத்துரைக்கிறோம்.

🔹 கெடு பலன் நீக்கம்:
உங்கள் ஜாதகத்தில் எதிர்பார்க்கப்படும் நெருக்கடிகள் மற்றும் தடைகளை சரியான பரிகாரங்களின் மூலம் எப்படி நீக்கி, நல்ல பலன்களை சுபமாக முன்னெடுத்துச் செல்லலாம் என்பதற்கான முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறோம்.

🔹 தெய்வ வழிபாடு மற்றும் தானங்கள்:
உங்களுக்கேற்ற தெய்வ வழிபாட்டு முறைகள், செய்யவேண்டிய தானங்கள் மற்றும் பரிகாரங்களை தெளிவாக எடுத்துரைத்து, வாழ்வை வளமாக்கும் நெறிகளை வகுத்துக் கொடுக்கிறோம்.


எங்கள் சேவை முழுவதும், உங்களது ஆன்மீக முன்னேற்றத்தையும், வாழ்வின் நலனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாரம்பரியமான  ஜோதிட அனுபவம் மூலம், கர்ம விளக்கங்கள் மற்றும் பரிகார ஆலோசனைகளுடன் உங்கள் வாழ்க்கை பாதையை ஒளிமயமாக்க நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்!